dhrisyam

பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் 'த்ரிஷ்யம்'. ஆனால், முதலில் இப்படம் மலையாளத்தில் ஜீது ஜோஸப் இயக்கத்தில் எடுக்கப்பட்டது. இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பலரையும் த்ரில்லாக்கிய இந்த படம், 50 கோடி வரை வசூலை ஈட்டியது.

Advertisment

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் அணமையில் கேரளாவில் தொடங்கியது. இதிலும் மோகன் லாலுடன் நடித்த அதே நடிகர்கள் நடிக்கின்றனர். கேரள அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து இந்த படத்தின் பிரம்மாண்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் தற்போது படக்குழுவினருக்கு, படத்தின் ஹீரோ மோகன்லால் பிரியாணி விருந்து அளித்துள்ளார். இதுகுறித்து நடிகை மீனா மற்றும் இவர்களின் மகள்களாக நடிக்கும் அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர். அருமையான பிரியாணி விருந்து அளித்ததற்காக மோகன்லாலுக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.