Advertisment

திரௌபதி இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகை!

Dharsha Gupta

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் மோகன் ஜி. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான 'திரௌபதி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் குறித்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், மற்றொரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இது குறித்து நடந்துவந்த கடும் விவாதங்களுக்கு மத்தியில், இப்படம் பல கோடிக்கும் மேல் வசூல் செய்து, 'கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்ட ஒரு படம் செய்த அதிகபட்ச வசூல்' என்ற சாதனையைப் படைத்தது.

Advertisment

இதனையடுத்து, இயக்குனர் மோகன் ஜி இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமானது. பின்னர், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. 'ருத்ரதாண்டவம்' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், 'திரௌபதி' படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷியே நாயகனாக நடிக்க உள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் நாயகி குறித்த புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமான 'தர்ஷா குப்தா' இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இத்தகவலை இயக்குனர் மோகன் ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

mohan g
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe