New update of Selvaragavan movie

'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத்தொடர்ந்து 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்துடன் மகாபாரதம் புத்தகம் இடம்பெற்றுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment