mohan g give update of Bakasuran movie song

Advertisment

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் பாடல் குறித்து அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மோகன்.ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா என தொடங்கும் வரிகள் கொண்ட பாடல் விரைவில் வெளியாகும்.. மிக பெரிய ஒரு பரவசத்தை இந்த பாடலின் இசை உருவாக்கும். செல்வராகவன் சார் நடிப்பில், நடனத்தில் அசத்தி இருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் 'பகாசூரன்' படத்தின் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.