/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/277_3.jpg)
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்படங்களைஇயக்கி பிரபலமான மோகன்.ஜிதற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கியுள்ளார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டிமுதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து வெளியான டிரைலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 17.02.2023அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனைத்தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் மோகன்.ஜி, "திரெளபதி தாய் மற்றும் ஈசன் அருளுடன் பகாசூரன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெள்ளிக்கிழமையன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பகாசூரன் யார் என்று காண தயாராகுங்கள்" எனக் குறிப்பிட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 17 அன்றுதனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படமும் வெளியாகவுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. நாகவம்சி மற்றும் சாய் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)