Advertisment

“திரௌபதி அருளுடன் ருத்ர பிரபாகரனின் அடுத்த ஆட்டம்” - இயக்குனர் மோகன்.ஜி அறிவிப்பு!

draupathi

Advertisment

'பழைய வண்ணாரப்பேட்டை' என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். இவருடைய இரண்டாவது படமான 'திரௌபதி' படத்தின் மூலம் நல்ல பிரபலமானார்.

'திரௌபதி' குறைந்த அளவிலான செலவில் எடுக்கப்பட்டு, நல்ல வசூலை வாரிக் குவித்தது. ஒரு பக்கம் சர்ச்சை மறு பக்கம் ஆதரவு என்று படம் வெளியான சமயத்தில் நல்ல விளம்பரமானது.

இந்நிலையில், 'திரௌபதி' இயக்குனர் மீண்டும் 'திரௌபதி' படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்டுடன் இணைந்து புதிய பட வேலைகளைத் துவங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் புதிய தோற்றம் ஒன்றை சமீபத்தில் இயக்குனர் மோகன் வெளியிட்டார். மேலும், ருத்ர பிரபாகரனின் ஆட்டம் தொடரும் என்று ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.விஜயதசமி அன்று இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

draupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe