mohan g and selvaragavan in bakasuran movie first single released

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'சிவ சிவாயம்' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில், செல்வராகவன் சிவனை வழிபாடு செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலில் 'ஆறாத இன்பம்... அருளும் மலை போற்றி' என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment