mic mohan

Advertisment

நடிகர் சங்க தேர்தல் நேற்று மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதல் நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். அப்போது வழக்கம்போல் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் மோகன் வாக்குசாவடிக்கு வந்தார். மைக் மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக நடிகர் மோகனிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள வாக்கு பதிவானது திரைஉலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.