பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார்.

Advertisment

modi vivek

இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தமிழ் மொழி கவிதையை பாராட்டி நடிகர் விவேக் ட்விட்டரில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்... ''நன்றி விவேக்! இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும், காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன'' என பதிவிட்டுள்ளார்.