/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-biopic-final.jpg)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது கடந்த கால பயணத்தை அடிப்படையாக வைத்து, அவரது வாழ்க்கை வரலாறு படம் ஒன்று தயாராகி வருகிறது. தமிழில் இந்த படத்திற்கு 'கர்மயோகி' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தினை இயக்குனர் சஞ்சய் திரிபாதி எழுதி இயக்க, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். தற்போது இந்த கூட்டணியோடு லைகா நிறுவனமும் இணைந்துள்ளது.
லைகா நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளது. மேலும் இப்படம் தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில், ஓமங் குமார் இயக்கத்தில் மோடியின் பயோபிக் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)