பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திரமோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கியுள்ளார்.

vivek oberoi

இப்படத்தில் மோடியின் இளமை பருவத்தில் தொடங்கி 2014ஆம் ஆண்டு அவர் தேர்தலில் வெற்றிபெற்றது வரை உள்ள சம்பவங்கள் படத்தில் உள்ளன.

Advertisment

கடந்த மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். தேர்தல் சமயம் என்பதால் பாஜகவுக்கு ஆதரவு அலையை இப்படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2bc7f5e2-64ab-4a85-835e-544ac8794e7c" height="221" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam.png" width="452" />

Advertisment

இதன்பின்பு இந்த படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே23ஆம் தேதிக்கு அடுத்த நாள் மே24ஆம் தேதி பி.எம். நரேந்திரமோடி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.