Advertisment

அது அனிருத் இல்லை... நான் தான்! சர்ச்சை புகைப்படத்திற்கு விளக்கம்! 

shaano

கோலமாவு கோகிலா, ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் பெண்வேடமிட்டது போல் ஒரு புகைப்படம் சமீபத்தில் வைரல் ஆனது. சில நாட்களுக்கு முன் அவர் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியதாகவும், அதில் அவர் பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த புகைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் மாடல் ஷானோ என்றும், அவர் ஒரு பிரைடல் ஷூட்டிற்காக இந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார் என்றும் தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பார்த்த அனிருத் ரசிகர் ஒருவர் இந்தப் படத்தில் இருக்கும் மாடலிடம், ''சிவப்பு நிறப் புடவையில் இருப்பது நீங்கள்தானே'' எனக் கேட்க, ''ஆம், நான்தான்'' என அந்த மாடல் உறுதிசெய்தார். இதன்மூலம், இந்தப் படத்தில் இருப்பது அனிருத் இல்லை எனவும், அனிருத்துக்கு எதிராக தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Advertisment
photoshoot anirudh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe