Skip to main content

அது அனிருத் இல்லை... நான் தான்! சர்ச்சை புகைப்படத்திற்கு விளக்கம்! 

Published on 23/03/2018 | Edited on 24/03/2018
shaano


கோலமாவு கோகிலா, ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் பெண்வேடமிட்டது போல் ஒரு புகைப்படம் சமீபத்தில் வைரல் ஆனது.  சில நாட்களுக்கு முன் அவர் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியதாகவும், அதில் அவர் பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த புகைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் மாடல் ஷானோ என்றும், அவர் ஒரு பிரைடல் ஷூட்டிற்காக இந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார் என்றும் தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பார்த்த அனிருத் ரசிகர் ஒருவர் இந்தப் படத்தில் இருக்கும்  மாடலிடம், ''சிவப்பு நிறப் புடவையில் இருப்பது நீங்கள்தானே'' எனக் கேட்க, ''ஆம், நான்தான்'' என அந்த மாடல் உறுதிசெய்தார். இதன்மூலம், இந்தப் படத்தில் இருப்பது அனிருத் இல்லை எனவும், அனிருத்துக்கு எதிராக தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அட ! அனிருத்தா இது...

Published on 22/03/2018 | Edited on 23/03/2018
anirudh


தெலுங்கு படங்களுக்கு தற்போது இசையமைத்து வரும் அனிருத் அடுத்தாக தமிழ் கோலமாவு கோகிலா, ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு இசையமைக்கிறார். மேலும் கடந்த காதலர்தினத்தையொட்டி ஜூலி என்ற ஆல்பம் பாடலை வெளியிட்ட அவர் நடிகைகள் பாணியில் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பெண் வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒரு பெண் அமர்ந்திருப்பது போல் இருக்கும் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த புகைப்படத்தில் பெண்வேடமிட்டிருப்பது அனிருத் என்று  பரவலாக பேசப்படுகிறது. பெரும்பான்மையாக முதலில் பார்த்தவர்கள் அனைவரும் யார் இந்த பெண்..? புதுமுக நடிகையா...? என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அது அனிருத் தான் என்று ஒரு சாரார் கூறிவருகின்றனர். மேலும், தற்போது இந்த புகைப்படம் இணைய தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. எது எப்படியோ இந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத்தா இல்லையா என்று அவர் தான் விளக்கமளிக்க வேண்டும்.