Advertisment

சரியான நேரம்... சரியான படம் - மு.க. ஸ்டாலின் பாராட்டு

பல தடைகளுக்கு பின்னர் வருகிற மார்ச் 6ஆம் தேதி ஜிப்ஸி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பு காட்சி படக்குழுவினரால் திரையிடப்பட்டது.

Advertisment

mk stalin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

குக்கூ, ஜோக்கர் படங்களுக்கு பின் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தில் நடாஷா சிங், சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லிம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தணிக்கை குழு இந்த படத்தில் பல காட்சிகளை கட் செய்ய வலியுரித்தியதால் மும்பை ரிவைஸிங் கமிட்டிக்கு சென்று அதன்பின் பல தடைகளை தாண்டி ஜிப்ஸி தற்போது ரிலீஸுக்கு தயாரிகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகள் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மார்ச் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு நுங்கம்பாக்கத்திலுள்ள ஃபோர் ஃபிரேம்ஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அவருடன் சேர்ந்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொருளாளர் துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோரும் ஜிப்ஸி படத்தை பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தை பகிர்ந்தார். அதில், “ சரியான நேரம்.. சரியான படம்” என்று பாராட்டினார்.

gypsy raju murugan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe