முன்னாள் பார்ன் நடிகை மியா கலிஃபா, இந்த துறையில் பணியாற்றதன் மூலம் வெறும் 12,000 டாலர் தான் சம்பாதித்திருக்கிறார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை மியா இந்த பார்ன் துறையில் மூன்று மாதங்களே பணியாற்றியுள்ளார். ஆனால், அந்த துறையைவிட்டு அவர் உடனடியாக வெளியேறிய நிலையில் இன்றுவரை பலர் தேடி தேடி பார்க்கும் ஒரு பார்ன் நடிகையாக இருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு பார்ன் வெப்பில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக இவர் இருந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர் பேசிய பேட்டியில், “மக்கள் நான் இந்த துறையில் நடித்ததன் மூலம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளேன் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் மொத்தமாக அந்த துறையில் சம்பாதித்தது 12,000 டாலர்தான். அந்த துறையை விட்டுவிட்டு வேறு வேலை தேடியபோது மிகவும் சிரமப்பட்டேன்”என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் சிறிதுகாலம்தான் இத்துறையில் பணியாற்றினேன் ஆனால் காட்டுத்தீயாக என்னுடைய செயல்கள் பரவியிருக்கின்றன. நான் விலகியபின்னும் ஐந்து வருடங்கள் முதலிடத்தை பிடித்திருக்கிறேன். இதனால்தான் பலர் நான் இப்போதும் பார்ன் துறையில் இருப்பதாக நினைக்கிறார்கள் போல” என்று தெரிவித்துள்ளார்.