Mithran R. Jawahar in Ariyavan movie title and motion poster released

தனுஷின் 'யாரடி நீ மோகினி' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர். தொடர்ந்து தனுஷை வைத்து 'குட்டி', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பின்னர், 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற தலைப்பில் ஒரு மலையாள படத்தை ரீமேக் செய்தார். அதனைத் தொடர்ந்து 'மதில்' என்ற படத்தை எடுத்த இவர் பின்பு தனுஷை வைத்து நான்காவது முறையாக 'திருச்சிற்றம்பலம்' படத்தினை இயக்கினார்.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து 'அரியவன்' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்க டேனியல் பாலாஜி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது. படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.