Skip to main content

மித்தாலி ராஜின் பயோபிக் ; ட்ரைலரை வெளியிட்ட படக்குழு

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Mithali Raj's biopic; The film crew released the trailer

 

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. அந்தவகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை வைத்து பாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 'சபாஷ் மித்து' என்ற தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்சி பன்னு நடிக்கிறர். 'வியாகாம்18 ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்க அமித் திரிவேதி இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ஒரு போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றது. 

 

இந்நிலையில் 'சபாஷ் மித்து' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர், மித்தாலி ராஜா வாழ்க்கையோடு சேர்த்து கிரிக்கெட் விளையாட்டில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளையும் பேசுவது போல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.    

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடவுள் அவமதிப்பு? - டாப்ஸிக்கு வலுக்கும் கண்டனங்கள்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Taapsee Pannu Trolled For Wearing Goddess Lakshmi Necklace

 

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

 

சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது அணிவகுப்பு நடைபெற்றது. அதில் டாப்ஸி அணிந்து வந்த உடையும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாப்ஸி சிவப்பு நிற கவுனும் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸும் அணிந்திருந்தார்.  

 

இந்த நிலையில் கவர்ச்சி உடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை அவர் எப்படி அணியலாம் என சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக டாப்ஸியின் செயல் உள்ளதாக கூறி கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு! 

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Indian cricketer Mithali Raj announces retirement

 

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 

 

பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழி நடத்திச் சென்றது பெருமை அளிக்கிறது. கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளர். 

 

232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் மிதாலி ராஜ் 7,805 ரன்களை எடுத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ்.