style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
துப்பறிவாளன் படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக சைக்கோ என்ற பெயரிட்டுள்ள படத்தை இயக்கவுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசும்போது.... "வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும்....? தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});