/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/496_2.jpg)
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா (20) என்ற மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயா, சிறு வயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று இலட்சியம் கொண்டவராக இருந்துள்ளார். அதற்காக பகுதி நேர வேலை செய்து கொண்டே தன்னை தயார்ப்படுத்தியும் வந்துள்ளார்.
அதன் படி கடந்த 2018ம் ஆண்டு, ‘மோனோ ஆக்டிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதற்காக அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனையடுத்து Forever Star India Awards கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார். பின்பு அங்கிருந்து மாநில அளவிலான அழகிபோட்டி கடந்த 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போட்டியில் ரக்ஷயா '‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று அசத்தினார்.
மேலும் வருகிற டிசம்பர் மாதம் 'மிஸ் இந்தியா' போட்டி நடைபெறவுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த போட்டியில், நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்ஷயா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)