Advertisment

யாருப்பா இது நம்ம யோகிபாபுவா? அடையாளமே தெரியாம மாறியிருக்காரே!

Miss Maggie  First look Teaser

Advertisment

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. குழுவில் பின்னால் நிற்கும் ஒருவராகவும், சண்டைக்காட்சிகளில் அடி வாங்கும் ஸ்டண்ட்மேனாகவும் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்; ‘அடேய், பன்னி மூஞ்சி வாயா’ என்றெல்லாம் நேரடியாகவே சினிமாவில் உடலமைப்பு வைத்து கிண்டல் அடிக்கப்பட்டவர்;பிற்காலத்தில் பிரபல நடிகையான நயன்தாராவுடன் டூயட் பாடுமளவுக்கு வளர்ந்து நின்றவர். இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் தேசியவிருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஜினி,விஜய் என முன்னணி நட்சத்திரங்களுடன் எல்லாம் நடித்திருக்கிறார். இவரது வளர்ச்சியை வைத்து படங்களின் நாயகனை வைத்து புரொமோசன் செய்யாமல் இவரை வைத்து போஸ்டர் வெளியிட்ட போது,தைரியமாக அந்தப் படத்தில் நான் காமெடி கேரக்டர் மட்டும் தான் செய்கிறேன். ஹீரோ வேற ஒருவர் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர்.

இவரது நடிப்பில் வெளியான டீசர் ஒன்று சமூகவலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. ஆங்கிலோ இந்தியன் பாட்டியாக மாறி நிற்கிற யோகிபாபு அச்சு அசலாக அப்படியே இருக்கிறார். படத்தின் கதாபாத்திரம் குறித்த விவரமெல்லாம் போகப்போகத்தான் தெரியவர வாய்ப்பிருக்கிறது. இப்படத்திற்கு ‘மிஸ் மேகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை லதா ஆர்.மணியரசு இயக்கியிருக்கிறார்.

Miss Maggie actor yogi babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe