/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/55_56.jpg)
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களைபெற்று வருகிறது.இருப்பினும்படத்தின் சண்டைக் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் பலரை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் 'வலிமை' படத்தின் இயக்குநர் எச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவர் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சாந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், " வலிமைபடத்தின் தொடக்க காட்சிகளில் வழக்கறிஞர்களை குற்றவாளிகள் போன்றுசித்தரித்திருப்பதைபார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளைசுட்டிக்காட்ட ஒட்டு மொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதுகண்டனத்திற்குரியது.சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை செய்துவரும்வழக்கறிஞர்களை தவறாக சித்தரிப்பதைஏற்றுக்கொள்ள முடியாது. இதனால்காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)