Advertisment

சாந்தனுவுக்கு இது புதிய பிறப்பாம்...

mishkin

விஷால் நடித்த துப்பறிவாளன் படத்திற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி நடித்த படம் சவரக்கத்தி. இதையடுத்து அவர் தற்போது சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்து வருகிறார். இதனால் சில நாட்களாக இயக்குனர் பணியில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த மிஷ்கின் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க சாந்தனு பாக்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார். ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார். நளனும் நந்தினியும், சுட்ட கதை, மற்றும் விரைவில் வெளியாகவுள்ள நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது என்று படக்குழு அதிகார்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்தது. இந்தப் படத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சாந்தனு, "இது எனது புதிய பிறவி" என்று குறிப்பிட்டு மகிழ்ந்திருந்தார்.

Advertisment
mishkin shanthanu pcsreeram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe