mirunal thakkur in kamal kalki 2898 ad movie

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின்நடிப்பில் உருவாகி வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, உள்ளிட்டோர் சிறப்ப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் மிருணாள் தாக்கூரும் நடிக்கவுள்ளதாகத்தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 12 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல முன்னணி பிரபலங்கள் இணைந்து வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.