ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'சுமோ' திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில்வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளஇப்படம், கடந்த 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்பிறகு, இப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், சுமோ திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.