ஜீவாவுடன் கைகோர்க்கும் மிர்ச்சி சிவா!

actor jiiva

ஜாகுவார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரபல கன்னட இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ‘கோல்மால்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிக்கின்றனர். ‘லிங்கா’ படத்தின் கதையாசிரியரான இயக்குநர் பொன்குமரனுக்கு இது தமிழில் அறிமுகப்படமாகும்.

பயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்க, யோகி பாபு, சோனியா அகர்வால், ரமேஷ் கண்ணா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை மொரீஷியஸில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்கும் முடிவில் உள்ளது.

jiiva
இதையும் படியுங்கள்
Subscribe