Mirchi Siva explains the story of Soodhu Kavvum 2

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தின் வெற்றியையடுத்து சி.வி.குமார் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்க அவருடன் இணைந்து கருணாகரன், ராதா ரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்திலிருந்து முன்னதாக ஃபர்ஸ் லுக் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றது. அதில் மிர்ச்சி சிவா, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட படகுழுவினர் பலர் பங்கேற்றனர்.

Advertisment

அந்நிகழ்ச்சியின் போது மிர்ச்சி சிவா பேசுகையில், “இயக்குநர் இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்ல வரும்போது முதல் பாகம் நல்ல படமாச்சே அதற்கு ஏன் இரண்டாவது பாகம்... எனத் தோன்றியது. பின்பு அவர் சூது கவ்வும் 2 படத்தின் கதை முதல் பாகத்தின் முந்தைய கதையாக தொடங்குகிறது என்றார். இந்த படத்தின் திரைக்கதை முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் கனெக்ட் செய்து, கருணாகரனை நான் மீட் பண்ணுவது போல் அமைந்திருக்கும். சூது கவ்வும் முதல் பாகம் கல்ட்(cult) ஃபிலிம்மாக இருந்தது. அதன் இரண்டாம் பாகம் ஃபன்(fun) ஃபிலிம்மாக இருக்கும்”என்றார்