siva

தன்னைப் போல நடனமாடியை சிறுவனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் மிர்ச்சி சிவா.

Advertisment

ரேடியா ஜாக்கியா தனது பயணத்தைத் தொடங்கிய சிவா, வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஹீரோயிஸமாக நடிப்பை வெளிப்படுத்தாமல் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் சிவா.

Advertisment

இவரது நடிப்பில் முழுக்க முழுக்க தமிழ் சினிமாக்களையும், நடிகர்களின் ஹீரோயிஸம், நடனம் ஆகியவற்றை கேலி செய்து எடுக்கப் பட்ட 'தமிழ்ப்படம்' முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 'தமிழ்ப்படம்' 3ஆம் பாகம் எப்போது ரிலீஸ் என்று இப்போதே சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்நிலையில் மிர்ச்சி சிவா, தமிழ்ப்படத்தில் ஆடிய நடன காட்சியைப் போல, சிறுவன் ஒருவன் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அந்த வீடியோவை பார்த்த சிவா, ''என்னைப் போல ஒரு நல்ல டான்ஸராக வரும் திறமை இவனுக்கு இருக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.