/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/294_20.jpg)
'லார்க்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மா.கா.பா ஆனந்த், ஷாரா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். 'லார்க்' ஸ்டுடியோஸ் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படகுழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். பேசுகையில், ''2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் தான் அந்த திறமை வெளிப்படும். அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி" என்றார்.
பாடகர் மனோ பேசுகையில், ''சிங்காரவேலன் படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால்உனக்காக பாட்டு காத்துக் கொண்டிருக்காது' என சொன்னார். அதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குநரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டுஎன்னை நடிக்க வைத்தனர்.
‘சிங்காரவேலன்’ படப்பிடிப்பின் போது ஒருமுறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குநர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அப்போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் ‘வணக்கம்’ வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.
படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், ''இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார்.நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல.,இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களாஎன எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.'' என்றார்.
பின்பு மீம்ஸ் குறித்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், "நான் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இல்லை. வாழ்க்கை நல்லாசந்தோஷமாக இருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்ற முடிவு தான். என்னை ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிடுகிறார்கள்.அவர் மிக பெரிய கிரிக்கெட்டர், மேலும் இந்திய அணியின் கேப்டன். அவரை போல் என்னால் கிரிக்கெட் ஆட முடியாது. என்னை போல் அவரால் நடனமாட முடியாது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)