'ஹனுமான்' படத்தை தொடர்ந்து தேஜா சஜ்ஜா  அடுத்ததாக 'மிராய் 'படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக ஆக்சன் ஜானரில் உருவாகும் இப்படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரியா சரண் , ஜெயராம், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கௌரா ஹரி இசையமைத்துள்ளார்.  

படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. உலக அளவில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில், எட்டு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தின் இசை ஜூலை 26 ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலுடன் இப்படத்திற்கான இசை தொடர்பான விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இது தொடர்பான போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.