தொடர்ந்து ட்ரெண்டிங்கில் நீடிக்கும் 'மின்னல் முரளி' ட்ரைலர்! 

Minnal Murali

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மின்னல் முரளி' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் பேசுகிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களைத்தொட்டுச்செல்லும் இத்திரைப்படம் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகவும், குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாகவும் உருவாகியுள்ளது. நேரடியாக மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

கடந்த 28ஆம் தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள 'மின்னல் முரளி' படத்தின் ட்ரைலர், இதுவரை யூடியூப் தளத்தில் 79 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங் வரிசையில் ஆறாவது இடத்திலும் தொடர்கிறது.

tovino thomas
இதையும் படியுங்கள்
Subscribe