Advertisment

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஹீரோ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது!

minnal murali

இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமையுடன், தீமையை எதிர்த்துப் போராடி உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்களை யார்தான் விரும்புவதில்லை? இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படங்களில் ஒன்றான 'மின்னல் முரளி', நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த சூப்பர் ஹீரோ படத்தில், மலையாள நட்சத்திரமான டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தில் அவரை ஒரு மின்னல் தாக்க, அதன் மூலம் அவருக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதைக்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் டப்பிங்செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் பாசில் ஜோசப் கூறுகையில், "மக்கள் தங்கள் வாழ்வுடனும் உணர்வுகளுடனும் நெருக்கமாக உணரும் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க நினைத்தோம். ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் முக்கிய சாராம்சம் ஆக்ஷன் அதிரடிதான் என்றாலும், ஒரு வலுவான கதையின் பின்னணியில்தான் ஆக்ஷன் இருக்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோளாக இருந்தது. இப்படத்தில் ஆக்ஷன் இருக்கும் அதே அளவு உணர்வுப்பூர்வமான கதையும் இருக்கும். இப்படம் மிகவும் உற்சாகமான அனுபவமாக இருக்கும். படத்தின் வெளியீட்டுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஒரு கனவுத் திரைப்படமாகும், இறுதியாக எங்கள் படைப்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் வெளியிடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

Advertisment

tovino thomas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe