Advertisment

"ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு பெருகும் என நம்புகிறேன்" - சூப்பர் ஹீரோ பட இயக்குநர் பேச்சு!

Minnal Murali

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மின்னல் முரளி' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் பேசுகிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இத்திரைப்படம் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகவும், குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாகவும் உருவாகியுள்ளது. நேரடியாக மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4b8931ad-c23f-4817-9aed-5e9a4647f0a9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_33.jpg" />

Advertisment

முன்னதாக கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட 'மின்னல் முரளி' படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் போனஸ் ட்ரைலரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த ட்ரைலர் குறித்து இயக்குநர் பாசில் ஜோசப் கூறுகையில், “ட்ரைலருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இப்படம் குறித்து ரசிகர்கள் அறிந்துகொள்ள, இந்த போனஸ் டிரெய்லர் மூலம் படத்தில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவை தர படத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர முடிவு செய்தோம். ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. போனஸ் ட்ரைலர் மூலம் படம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு பெருகுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" எனக் கூறினார்.

tovino thomas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe