Advertisment

ரெட் ஜெயண்ட் சொத்து மதிப்பு 2000 கோடியாம்; விளக்கமளித்து சிரித்த அமைச்சர் உதயநிதி!

minister udhayanidhi stalin fun speech about 2000 crore

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால தலைமுறையினருக்கு வழங்குவதற்காக 2023 ஆண்டிற்கான தக்‌ஷின் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான துவக்க விழாவில் நடிகர் கார்த்தி, நடிகை மஞ்சு வாரியர், இயக்குநர் வெற்றிமாறன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “அமைச்சர் ஆனதும் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. இதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி முதல்வரிடம் அனுமதி பெற்றுத்தான் கலந்து கொள்கிறேன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாக 15 படங்கள் தயாரித்திருக்கிறேன். 15 படங்களில் நடித்திருக்கிறேன். விநியோகமும் செய்திருக்கிறேன்.

Advertisment

மூன்று நாட்களுக்கு முன்னர் ஒருத்தருரெட் ஜெயண்ட் நிறுவனத்தோட சொத்து மதிப்பு 2000 கோடின்னு சொல்லிட்டாரு. இங்கிருக்கிற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உண்மை தெரியும். அதனால் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தோட மதிப்பு என்னவென்பது உங்களுக்கு தெரியும். போகிறப்போக்கில் அடிச்சுவிட்டு போயிடுறாங்க என்று சிரித்துக்கொண்டே பேசினார்.

cm stalin udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe