minister udhayanidhi stalin about dhanush captain miller

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் நேற்று (13.01.2024) வெளியான படம் 'கேப்டன் மில்லர்'. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இதனால் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ந்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி. அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர்ஜி.வி. பிரகாஷ், சத்ய ஜோதி, பிரியங்கா மோகன் மற்றும் சண்டை பயிற்சியாளர் திலீப்உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

Advertisment

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.