Advertisment

"வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம்" - யோகிபாபுவுக்கு அமைச்சர் பாராட்டு

minister subramanian attend yogi babu baby birthday function

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' மற்றும்பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்திலும்நடிக்கிறார்.

Advertisment

மேலும், ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கில்' உள்ளிட்ட படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்ட்ராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபோக ஹெச்.வினோத் இயக்கத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் யோகிபாபுவின் குழந்தை பிறந்தநாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்த அமைச்சர், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதைக் காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபுவின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்தநாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் இயக்குநர் பார்த்திபனும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.

actor yogi babu Ma Subramanian
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe