Advertisment

லியோ படம் பிரச்சனை தொடர்பான கேள்வி - அமைச்சர் சாமிநாதன் பதில்

minister saminathan about vijay leo movie

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டிருந்து பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையானது. அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடக்காததால் ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று மாலை படத்தின் ட்ரைலர் வெளியானது. பல்வேறு இடங்களில் திரையரங்கில் ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணிதிரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், திரையரங்கின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் லியோ பட வெளியீட்டில் விநியோகஸ்தர்கள் சிரமப்படுவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாமிநாதன், "எந்த விமர்சனங்கள் வந்தாலும் பொதுவாக வருகிறதோ தவிரதனிப்பட்ட முறையில் என்ன சம்பவம் என்று எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் அதில் தவறிருக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் புகாரின் அடிப்படையில் உரியமுறையில் பரிசீலிக்கப்படும்" என்றார்.

actor vijay lokesh kanagaraj minister
இதையும் படியுங்கள்
Subscribe