Advertisment

அமைச்சர் ரோஜா மீது பண மோசடி புகார்

minister roja counciler money laundering issue

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் நடிகை ரோஜா. இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் புத்தூர் நகராட்சியின் கவுன்சிலர் புவனேஷ்வரி என்பவர், ரோஜா மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

புவனேஷ்வரிக்கு நகர் மன்றத்தலைவர் பதவி வாங்கி தருவதாக ரோஜா கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ரோஜாவின் உறவினர் குமாரசாமியிடம் ரூ.40 லட்சம் தந்துள்ளதாக புவனேஷ்வரி தெரிவித்துள்ளார். மேலும் முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்ததற்கான வீடியோஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisment

மேலும், இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு ஆண்டுகள் கடந்தும், பதவி வழங்கவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ரோஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலையிட்டு சரி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

Andhra Pradesh actress roja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe