ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்சுற்றுலாத்துறை அமைச்சரும்நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வைரலாவது வழக்கம். அந்த வகையில் முன்னதாக கபடி விளையாடியது, நடனம் ஆடியது, ஆட்டோ ஓட்டியது என ரோஜாவின் வீடியோவெளியாகி வைரலானது.
இந்நிலையில் அமைச்சர் ரோஜா விசாகப்பட்டினத்தில் குத்துச்சண்டை போட்டியைத்தொடங்கி வைக்கச் சென்றார். அப்போது திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு சண்டை போட களத்தில் இறங்கி சுவாரசியப்படுத்தினார். மேலும் வீரர்களுடன் குத்துச்சண்டை போட்ட ரோஜாவை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.