Minister Roja beach slippers controversy

Advertisment

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வருகிறார். அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் முன்னதாக கபடி விளையாடியது, நடனம் ஆடியது, ஆட்டோ ஓட்டியது என ரோஜாவின் வீடியோக்கள்வெளியாகி வைரலாயின. இந்நிலையில், அமைச்சர் ரோஜா தொடர்பான புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு அமைச்சர் ரோஜா பார்வையிடச் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ரோஜா, பின்பு கடல் நீரில் இறங்கினார். அப்போது தனது காலணியை அவரது ஊழியரிடம் கொடுத்திருந்தார். அந்த ஊழியர் காலணியை கையில் வைத்திருக்க, அது தான் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஊழியராக இருந்தாலும் காலணியை கையில் வைத்திருப்பது தவறு.அதை ரோஜா ஏன் கண்டிக்கவில்லை என்றபதிவுகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களாகஎழுந்து வருகின்றன.