/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/177_18.jpg)
போஸ் வெங்கட், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமரசன் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் 'மா.பொ.சி' படத்தின் படப்பிடிப்பு அறந்தாங்கியில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டுள்ளார். மேலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.பாரதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி ராமச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)