அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்; பங்கேற்ற அமைச்சர்

ministe geetha jeevan participate in good bad ugly celebration

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியது.

இந்த நிலையில் இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. இதையொட்டி படத்தில் நடித்த பிரசன்னா, அர்ஜூன் தாஸ் இருவரும் அஜித் குறித்து தங்களது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரசிகர்களுடன் ஷாலினி மற்றும் அவரது மகள், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

இந்த சூழலில் தூத்துக்குடியில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றுள்ளார். அவருக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட கேக்கை வெட்டு மகிழ்ந்தார். அடுத்து ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

ACTOR AJITHKUMAR Geetha jeevan
இதையும் படியுங்கள்
Subscribe