vgd

Advertisment

'தமிழுக்கு எண்ஒன்றை அழுத்தவும்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பிக்பாஸ் 2 போட்டி மூலம் பிரபலமான நடிகை ஐஷ்வர்யா தத்தா தற்போது பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் 'மிளிர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.இரஞ்சித் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா தத்தா கோபமாக வாயில் குச்சியை வைத்து கடிக்கும்படி போஸ் கொடுத்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சினிமா டூர் என்டர்டைன்மெண்ட் சார்பில் சூர்யாதேவி தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நாகேந்திரன் இயக்கியுள்ளார்.