milindh

கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிலிந்த் சோமன். இதைத்தொடர்ந்து 'அலெக்ஸ் பாண்டியன்','வித்தகன்', 'பையா' ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால், இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர்.

Advertisment

Advertisment

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு மிலிந்த் மிகப்பெரிய மாடலாக வலம் வந்தார், அப்போது மாடல் அழகி மது சோப்ராவுடன் ஒரு விளம்பர போட்டோஷூட்டில் இருவரும் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தனர். மிலிந்த் சோமன் ஒரு பெரிய மலைப்பாம்பையும் தன் கழுத்தில் வைத்திருப்பார். இந்தப் புகைப்படம் அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, மும்பை போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.

தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மிலிந்த், உடற்பயிற்சி குறித்தும் தன்னுடைய பழைய நினைவுகள் குறித்தும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் மிலிந்த் ஆடை இல்லாமல் மாடலிங் செய்த புகைப்படத்தைப் பதிவிட்டு, அதனுடன், “இது 25 வருடம் பழமையான படம். அப்போது சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் கிடையாது. இப்போது அந்தப் புகைப்படத்தை வெளியிட்டால் என்ன எதிர்வினைகள் வரும் என்று ஆச்சரியப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்குத் தற்போது எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.