LIGER

Advertisment

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் படம் 'லைகர்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், 'லைகர்' படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மைக் டைசன் சம்மந்தப்பட்ட காட்சிகளைக் கோவாவில் படமாக்கதிட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இது இந்திய சினிமாவில் மைக் டைசனின் அறிமுகப்படமாகும்.

'லைகர்' படத்தில் மைக் டைசனுடன் இணைவது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, "இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக உலகின் மோசமான மனிதன், பாக்சிங் கடவுள், இரும்பு மனிதன் மைக் டைசன் 'லைகர்' படத்தில் இணைகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ‘லைகர்’ படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.