mike tyson

Advertisment

பாக்ஸிங் விளையாட்டில் மிகவும் பிரபலமானவீரர்களில் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த மைக் டைசன். மிக இளம் வயதிலேயே குத்துச்சண்டை போட்டிக்கான உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு மைக் டைசன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, பயோபிக் உருவாக இருக்கிறது. அந்த படத்தில் மைக் டைசனாக ஆஸ்கார் விருது பெற்ற ஜேமி ஃபாக்ஸ் நடிக்கின்றார் என்றுசெய்திகள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில் ஜேமி ஃபாக்ஸ் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தபோது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் இந்த பையோபிக் குறித்து கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த ஜேமி, “நிச்சயமாக மைக் டைசன் பயோபிக் உருவாகிறது. வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் எடுப்பது மிகவும் கடினமானது. சில நேரங்களில் அவற்றை எடுத்து முடிக்க 20 ஆண்டுகள் கூட ஆகும். ஆனால் நாங்கள் தற்போதுதான் வேலைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளோம்.

Advertisment

நாங்கள் அனைவரது வளர்ச்சியையும் காட்ட விரும்புகிறோம். இந்த கதையை தேர்வு செய்யும்போது மைக் டைசனுடைய பயணத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். நான் தான் மைக் டைசன் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு இந்த படத்திற்காக மாற இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.