/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_64.jpg)
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட தோல்விக்கு பிறகு சிம்பு நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து சிம்பு அடுத்ததாக சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதன் படப்பிடிப்பு நேற்று ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் சிம்புவால் தோல்வியடைந்ததால் அவர் தனக்கு ரூ.20 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் இதுகுறித்து விசாரணை நடத்தியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படாத நிலையில் மைக்கேல் ராயப்பன் தற்போது சிம்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்ததை எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது... "சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)