michael madana kamarajan actor praveen kumar passed away

நடிப்பு, விளையாட்டு அரசியல் என பன்முக திறமை கொண்ட பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான 'மைக்கேல்மதன காமராஜன்' படத்தில் பீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடு பீம் பாய் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது.அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பிரவீன் குமார் சோப்தி ஆசிய அளவிலானபோட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளார். இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மிகட்சியில் இணைந்த இவர்டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாசிபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டே பாஜகவில் இணைந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="36ecc582-6fdd-4f06-8f17-808e1e58dac6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_2.jpg" />

Advertisment

இந்நிலையில் பிரவீன் குமார் சோப்திக்குநேற்று(7.2.2022) உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் குமார் சோப்திசிகிச்சை பலனின்றி இரவு மாரடைப்பு காரணமாகஉயிரிழந்தார். இவரின்மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.