பாப் இசைஉலகின் பிதாமகன், பாப் ரசிகர்களின் கடவுள் என்று போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். உலகின் எல்லா மூலையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும்மக்கள் மனதில்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நடனத்தை பற்றி படம் எடுத்தால் இவரதுகுறிப்பு இல்லாமல் எடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு புகழ் உச்சியில் இருந்தார். அந்தவகையில் பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் கூட அவரதுரெஃபரன்ஸ் இருந்தது. அதற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருந்தது.
இப்படி மைக்கேல் ஜாக்சன், மற்ற படங்களில் ரெஃபரன்ஸ் ஆகவும்குறியீடுகளாகவும்வந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றையாரும் படமாக்கவில்லைஎன்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கு விடை தரும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மைக்கேல் ஜாக்சன் பயோ-பிக், ஹாலிவுட்டில் 'மைக்கேல்' என்ற தலைப்பில் உருவாக்குவதாகவும்அதற்கானமுயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் ஜான் லோகன் எழுத்தில் கிரஹாம் கிங் தயாரிப்பில் அன்டோயின் ஃபுகுவாஇயக்கத்தில் இந்த ஆண்டுஇறுதியில் படத்தின் பணிகள் தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்தடுத்துஅப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.