54வது கோவா சர்வதேச இந்தியத்திரைப்பட விழாஅடுத்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள்தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த சர்வதேசத்திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்க்கு,சத்யஜித் ரே வாழ்நாள்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.