
பிரபல பார்ன் நடிகையான மியா கலிஃபா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று பரவிய வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் மியா கலிஃபா.
சிறிது நாட்களாக மியா கலிஃபா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இல்லாத காரணத்தால் தற்கொலை செய்துவிட்டார் என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர். ஆனால், மியா கலிஃபா மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதால்தான் சமூக வலைத்தளத்திற்கு வராமல் ஓய்வு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மியா கலிஃபா குறித்து பரவிய வதந்திக்கு அவர் ட்விட்டரில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், “எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்துகளைக் கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று வேடிக்கையாக பதிலளித்தார்.
மியா 2019ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலரான ராபர்ட் சென்ட்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)